இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத்துறை மாணவர் அஜிதேஷ், தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டு விளையாடி வருகிறார்.

அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச அணிக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே 86 ரன்கள் எடுத்தார். இதற்காக எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் மாணவரின் திறமையை பாராட்டினார்.

கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், மாணவருக்கு பொன்னாடைப் போர்த்தி பாராட்டி வாழ்த்தினார்.

மாணவர் அஜிதேஷ், தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதேபோல் தமிழ்நாடு அணிக்காக ரஞ்சி கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.