கோவை நேரு சர்வதேச பள்ளியின் 4 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நேரு இண்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
முக்கிய விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழக, என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர், இயக்குனரும் பேராசிரியருமான அண்ணாதுரை கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராக கோவை நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும், செயலாளருமான கிருஷ்ணகுமார், கலந்துகொண்டு பேசும் போது: மாணவர்கள் சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வமுடன் ஈடுபடவேண்டும். இதன் மூலம் உடல் உறுதியோடு இருப்பதுடன் நோய்களும் நம்மை தாக்காது. விளையாட்டு வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
பள்ளியின் முதல்வர் சிவா பிரகாஷ், நேரு சர்வதேச பள்ளி மற்றும் நேரு கிட்ஸ் அகாடமி தாளாளர் சைதன்யா கிருஷ்ணகுமார், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

