டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 27 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

டாக்டர் என்.ஜி.பி கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், விளையாட்டு விழாவினைத் தொடங்கி வைத்தார். முதன்மை செயல் இயக்க அலுவலர் நடேசன், என்.ஜி.பி கல்விக்குழுமங்களின் கல்விசார் இயக்குநர் முத்துச்சாமி, கல்லூரியின் முதல்வர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் கல்லூரியின் மாணவ மாணவிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது. பேராசிரியர்களுக்கான ஓட்டப் பந்தயம், நடைப்பயிற்சி , மாணவர்களுக்கான ஓட்டப் பந்தயம், ஈட்டி ஏறிதல், தட்டு எறிதல், மட்டைப் பந்து, பூப்பந்து மற்றும் கைப்பந்துப் போட்டிகள் நடைபெற்றது.

5 15

மாணவ மாணவியர்களுக்கான நான்கு அணியில் ரூபி அணி 154 தரப்புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றது. மாணவர் பிரிவில் உணவு மற்றும் உணவாக மேலாண்மை மூன்றாம்ஆண்டு மாணவர் முகமது தௌபிக் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

மாணவியர் பிரிவில் முதனிலை அறிவியல் ஊட்டச்சத்து உணவுக் கட்டுப்பாட்டியல் துறை மாணவி நந்தனா,  சாம்பியன்ஷிப் பட்டத்தினைப் பெற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

6 9 scaled