கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் பாரதி விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் தமிழ்த்துறை, வானொலிச் செம்மல் கமலநாதன், சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து விழாவை நடத்தின.
நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக, ‘நல்லவை எண்ணல் வேண்டும்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் கவிதாசன் கலந்துகொண்டு சிறப்புரையற்றினார்.

அவர் பேசுகையில், பாரதியின் கனவுகள் நனவாக பெண்கள் பெரிதும் பங்கு வகிக்கின்றனர். துன்பத்தில் இருக்கும் நம்மை காப்பற்ற ஒரே ஆயுதம் கல்வி தான். கல்வியை நன்றாக கற்று என்றும் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் என்றார்.
