கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில், அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாள், தைப்பூசத் திருநாள், மற்றும் தை மாத பெளர்ணமி ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு, பீளமேடு காந்தி மாநகர் பகுதியில் அமைந்துள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் உள்ள முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு உணவு வழங்கப்பட்டது.
இந்த நற்செயல் நிகழ்வில் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, அன்பும் பரிவும் வழங்கினர். விழாவின் சிறப்பு, வள்ளலாரின் கருணை மிக்க உணர்வுகளுக்கு ஒப்பாக, அனைவருக்கும் பசிதீர உணவு வழங்கப்பட்டதோடு, மனமகிழ்ச்சியும் ஏற்படுத்தியது.