கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி)  முதலாம் ஆண்டு மாணவர்களுடன் டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானி டில்லி பாபு பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அவர் பேசும் போது, தனது வாழ்வில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகள் , முன்னாள் குடியரசுத்தலைவர்  ஏ பி ஜே அப்துல்கலாம் மூத்த விஞ்ஞானி ராகேஷ் சர்மா ஆகியோர் டி.ஆர்.டி.ஓ துறையின் மூலமாக நமது நாட்டிற்கு ஆற்றிய சேவைகளை விளக்கினார். மேலும் மாணவர்கள் டி.ஆர்.டி.ஓ துறையின் மூலமாக நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சி படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொறியியலின் முக்கிய பங்கினை விளக்கத்தோடு மாணவர்கள் புத்தக அறிவுடன் நின்று விடாமல், நவீன மற்றும் எதிர்கால தேவைகளுக்கான புதிய கண்டுபிடிப்புகளில் தங்களது கவனத்தை செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

சமூக ஊடகங்களை அதிகளவில் மாணவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு  வலியுறுத்தினார். இந்நிகழ்வில் கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, துணைத்தலைவர் இந்து முருகேசன், முதன்மை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.