கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியானது, நேவிகேட்ஸ் லேப்ஸுடன் இணைந்து அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவு சிறப்பு ஆய்வகத்தை கட்டமைத்துள்ளது.

ஏஐ சார்ந்த பல்வேறு புதுமைகளை உருவாக்கும் நோக்கில் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் வணிகப் பகுப்பாய்வியல் துறை முன்னெடுத்த இந்த ஆய்வகத்தில் உயர் செயல்திறன் கொண்ட கணினி ஜிபியு மற்றும் சிபியு, ஏஐ மாதிரிகள், மென்பொருள்கள் மற்றும் கருவிகள் ஆகியவை உள்ளன.

kpr 2

தொடக்க விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர் நேவிகேட்ஸ் லேப்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி நந்தீஸ் குமார் தனது உரையில், “இந்த ஏஐ சிறப்பு ஆய்வகம் கற்றல், ஆராய்ச்சி, மற்றும் தொழில்துறையோடு இணைந்து செயல்படுதல் ஆகியவற்றுக்கு மையமாகச் செயல்படும்” என்று குறிப்பிட்டார்.

மாணவர்களின் பொறியியல் பட்டப் படிப்போடு ஏஐ தொழில்நுட்பத்தில் பயிற்சியை வழங்கி ஒரு குறு பட்டப் படிப்பை வழங்க உள்ளதாக கல்லூரியின் முதல்வர் சரவணன் கூறினார். மேலும், “கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் பொது மக்களின் வாழ்வில் பயன்படும் பல்வேறு தீர்வுகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர்” என்றார்.