ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில் நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

பயிற்சியில் 18 முதல் 32 வயது வரை நிரம்பி இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, பொறியியல் படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலம் 45 நாட்கள் ஆகும்.

பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டுக் கழக அங்கீகார  சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.18,000 முதல் ரூ.30,000 வரை கிடைக்க வழிவகை செய்யப்பபடும்.

வேலை வாய்ப்பினை விரும்பாத இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் சென்னை உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி, உணவுக்கான செலவினம் ஆகியவை டாக்டர் ரெட்டி நிறுவனம் மூலமாக ஏற்கப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.