எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்கள் சார்பில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கூடுதல் எஸ்.பி., இன்பா கலந்துகொண்டு நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.

ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கமாண்டர் மிர்னாலினி, எஸ்.என்.எஸ். கல்லுாரி முன்னாள் மாணவிகள் மற்றும் ஆர்டெமிஸ்எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மிருதுலா விஜயகுமார், கூடுதல் அரசு வழக்குரைஞர் சிந்துஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நிகழ்வில், சிவில் சர்வீசஸ் தேர்வுகளின் முக்கியத்துவம், பெண்களுக்கு கடற்படையில் கிடைக்கும் வாய்ப்புகள், பெண்கள் தொழில் தொடங்கும் போது எதிர்கொள்ளும் சவால்கள், பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.

விழாவில், எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர், கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.