எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஓ.டி.ஓ.ஓ.மென்பொருள் நிறுவனம் இணைந்து, 24 மணி நேர தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது.
புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கோடிங் திறன்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஹேக்கத்தானில் மொத்தமாக ரூ.1,05,000 ரொக்கப் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதில், விஜயவாடா கே.எல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்து ரூ.45,000 பரிசும், பெங்களூரு சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இரண்டாமிடத்தைப் பிடித்து ரூ.35,000 பரிசும், கோவை எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி மூன்றாமிடத்தைப் பிடித்து, ரூ.25,000 ரொக்கப் பரிசும் பெற்றனர்.
