கோவை எஸ்.என்.எஸ். அகாடமியில் ஸ்பெக்ட்ரம் 2026 – ஏ.ஐ கண்காட்சி நடைபெற்றது. டிசைன் திங்கிங் மூலம் மாணவர்கள் நிஜ வாழ்க்கைச் சிக்கல்களுக்குப் புதுமையான தீர்வுகள் கண்டறிந்து காட்சிப்படுத்தினர்.
பள்ளியின் முதல்வர் ஸ்ரீவித்யா பிரின்ஸ் வரவேற்றார். எஸ்.என்.எஸ். குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார், தாளாளர் ராஜலட்சுமி தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் இ.ஹெச்.எஸ். மற்றும் சஸ்டெய்னபிளிட்டி மண்டலத் தலைவர் சசிகலா சாம், சமூகத்திற்குப் பயன்படும் எதிர்கால நோக்குடைய தீர்வுகளை மாணவர்கள் முன்வைத்ததைப் பாராட்டினார்.
