ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தமிழ்நாட்டில் முதன் முறையாக விட்ரோஸ் ஆட்டோமேஷன் இயந்திரத்தை உயிர்வேதியியல் துறை ஆய்வகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் விட்ரோஸ் எக்ஸ்டி 7600 ஒருங்கிணைத்த பகுப்பாய்விகளுடன் இணைக்கப்பட்ட க்யூடேல் ஆர்த்தோவின் வின் விட்ரோஸ் ஆட்டோமேஷன் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது.
இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இரத்தப் பரிசோதனைக்கான உலகத் தரம் வாய்ந்த ரோபோட்டிக் ஆட்டோமேஷனை வழங்கும் அதிநவீன மருத்துவ ஆய்வக இயந்திரமாகும். இந்த மேம்பட்ட அமைப்பை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் மற்றும் க்யூடேல் ஆர்த்தோவின் ஆசிய பசிபிக் துணைத் தலைவர் ஆனந்த் பாண்டே அறிமுகப்படுத்தினர். அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் அழகப்பன், நோய் கண்டறிதல் துறை நிர்வாக இயக்குனர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தினர்.
மிகத் துல்லியமான மற்றும் நம்பகமான இரத்தப் பரிசோதனை அறிக்கைகளை மிகக்குறைந்த நேரத்தில் குறைந்த மாதிரி அளவுகளுடன் வழங்குவதற்காக இந்த அதிநவீன அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.