ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தினவிழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டாக்டர்.கலாம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் கிஷோர் சந்திரன்  கலந்துகொண்டு கொடியேற்றினார்.

விழாவில் கல்லூரியின் தலைவர் மகாவீர் போத்ரா, துணைத்தலைவர் கமலேஷ் பாப்னா, செயலாளர் சுனில்குமார் நஹாடா, கோவை நலச்சங்கத்தின் உறுப்பினர் ஸீத்தல் மேத்தா, கல்லூரியின் முதல்வர் சுப்பிரமணி, மேலாண்மைத்துறை இயக்குநர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய மாணவர் படை மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். பேச்சு, கட்டுரை, கவிதை, கோலம் ஆகிய போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.