கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் தொடர்ந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று ராமநாதபுரம், ஒலம்பஸ் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது மக்களுடன் நெருக்கமாக பழகி, அப்பகுதியில் உள்ள ஒரு அயனிங் (இஸ்திரி) கடையில் சென்று துணிகளை தானே இஸ்திரி செய்ததுடன், அங்கு இருந்த பொதுமக்களிடம் தனது தேர்தல் வாக்குறுதிகளை விளக்கி ஆதரவு கோரினார். இந்த நிகழ்வு அங்கிருந்த மக்களின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து, அதே கடையில் பொதுமக்களுடன் சேர்ந்து அமர்ந்து உரையாடிய அவர், எளிமையான முறையில் தனது காலை உணவையும் அங்கு உட்கொண்டார். இதன் மூலம் பொதுமக்களுடன் நெருக்கம் ஏற்படுத்தும் முயற்சியாக இந்த பிரச்சாரம் பார்க்கப்படுகிறது.

இந்த பிரச்சாரத்தின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.
