இசை மற்றும் நடன கச்சேரிகளை நேரில் கேட்டால் மட்டுமே ரசனையும் அனுபவமும் கிடைக்கும் என ஸ்ரீ மாருதி கான சாபாவின் துவக்க விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள முன்னணி  இசை மற்றும் பரதநாட்டிய கலைஞர்களால் ஆர்.எஸ் புரத்தில் ஒலி மற்றும் ஒளி அமைப்புடன் கூடிய ஸ்ரீ மாருதி கான சபா தொடங்கப்பட்டது. இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பூஜ்யஶ்ரீ மாதாஜி வித்தாம்மா, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம். கிருஷ்ணன், சங்கர் குழுமங்களின் இயக்குநர் மோகன் சங்கர், ரோட்டரி மாவட்ட ஆளுநர் 3201 சுந்தரவடிவேலு ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

ISAI

கோவை வாழ் மக்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் ஶ்ரீ மாருதி கான சபாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களால் இசை, நடனம் மற்றும் களரி பயிற்சி போன்ற மனம் மற்றும் உடல் நலம் பேணும் கலைகள், ஒலி,ஒளி அமைப்புடன் கூடிய ஶ்ரீ மாருதி கான சபா அரங்கம் இசை மற்றும் நடனத்துறை கலைஞர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக ஶ்ரீ மாருதி கான சபா நிர்வாகிகளான மிருதங்க கலைஞர் மாயவரம் விஸ்வநாதன் மற்றும் ஒலி,ஒளி தொழில்நுட்ப வல்லுநர் கிருஷ்ணன் முருகன் ஆகியோர் தெரிவித்தனர்.