ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இந்திய தேயிலை வாரியமும், இணைந்து “கல்வி நிறுவனங்களில் தென்னிந்திய தேயிலையின் தரம்” என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கை அண்மையில் நடத்தியது.
இதில் சிறப்பு விருந்தினராக குன்னூர் தேயிலை மேம்பாட்டு உதவி இயக்குநர் செல்வம் மற்றும் பட்டீஸ் கஃபே நிறுவனர் நிர்மல் ராஜ் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டு, உயர்தர தேயிலை தரங்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும், தென்னிந்திய தேயிலையின் உலகளாவிய முக்கியத்துவத்தையும், கடுமையான தரக் கட்டுப்பாட்டின் அவசியத்தையும், வலியுறுத்தினர். அச்சமயத்தில், 300 க்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த தேயிலை வகைகளை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பாலசுப்ரமணியம், துணை முதல்வர் சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.