கோவை தன்னம்பிக்கை அறக்கட்டளை சார்பில் வெற்றிக் கனவுகள் 2025 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னை காவல்துறை நிர்வாக பிரிவு ஐ.ஜி பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பல்வேறு கல்லூரிகளில் பயின்று வரும் பல துறைகளில் சிறப்பாக சாதனை புரிந்த 27 மாணவர்களுக்கு “தன்னம்பிக்கை விருது 2024” வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக, தன்னம்பிக்கை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சிந்தனை கவிஞர் டாக்டர் கவிதாசன் தன்னம்பிக்கை எழுச்சி உரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பொருளியல் துறை தலைவர் கோவிந்தராஜன், தன்னம்பிக்கை அறக்கட்டளையின் அறங்காவலர்கள் சுதாகர், சரவணன், நேரு கல்வி குழுமங்களின் மக்கள் தொடர்பு இயக்குநர் முரளிதரன் மற்றும் மாணவ மாணவியரின் பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.