ஷாலோம் மெட் எஜுகேஷன் வாயிலாக வெளிநாடுகளில் மருத்துவ கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்சில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாமல் கோவை, தெற்கு காவல்துறை துணை ஆணையாளர் கார்த்திகேயன், ராயல் கேர் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினர். மேலும் எழுத்தாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஈரோடு மகேஷ் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

shalom

விழாவில் அரசு பள்ளியில் பயின்ற 6 மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பிலான அட்மிஷன், விசா, டாக்குமெண்டேஷன், விமான கட்டணம் என மொத்தம் ரூ.18 லட்சத்துக்கான உதவித் தொகை வழங்கப்பட்டது.

மேலும் ஷாலோம் நிறுவனம் அறிவித்த ஸ்காலர்ஷிப் திட்டத்தின் படி தற்போது வெளிநாடு செல்லும் முதற் குழுவில் இருந்து 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் 6 வருட கல்வி கட்டணம் சுமார் 50 லட்சத்துக்கான உதவித்தொகை வழங்கபட்டது.

மேலும் தற்போது வெளிநாடு செல்லும் முதற்குழுவில் உள்ள 60 மாணவர்களுக்கும் தலா ரூ.50,000 மதிப்பிலான இலவச டேப், புத்தகங்கள், மருத்துவ உபகரணங்கள் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கபட்டது.

shalom3

நிகழ்வின் முடிவில் ஷாலோம் மெட் ஏஜுகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் அனிதா காமராஜ் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.