கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி உதவித்தொகை மற்றும் பள்ளி மாணவர்களுக்கான இளம் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதில் நினைவாற்றலை அதிகரித்தல், கவன சிதறலை குறைத்தல், உடல் நலத்தை பேணுதல் பற்றி தனது வாழ்க்கை சம்பவங்களோடு இணைத்து மாணவ மாணவிகளுக்கு சிவகுமார் அறிவுறுத்தினார். மேலும் பெற்றோர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முன்னதாக கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் கே.பி. ராமசாமி, படித்து சாதிப்பவர்களுக்கே அனைத்து இடங்களிலும் அதிகாரமும் முக்கியத்துவமும் கிடைக்குமென கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

விழாவில் கல்லூரியின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன், நடப்பாண்டில் 1100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கும், 17 நாடுகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களுக்கும் ரூ.13 கோடி உதவித்தொகை வழங்கியதாக குறிப்பிட்டார்.
மேலும் கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 58 கோடி உதவித்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது. விழாவில் ஆர்.கே.ஆர் கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.கே. ராமசாமி வாழ்த்துரை வழங்கினார்.
