சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக, மகாகவி பாரதியார் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில், சிறப்புச் சிந்தனைப் பட்டிமன்றம் நடைபெற்றது.

“பண்பாட்டையும் ஒழுக்க நெறியையும் போதிப்பது பெற்றோர்களா? ஆசிரியர்களா?” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில், தமிழாசிரியர் கருணாநிதி நடுவராக பங்கேற்றார். பள்ளிச் செயலர் கவிதாசன் தலைமையுரையாற்றினார்.

sachinanda pattimandram

பண்பாட்டையும் ஒழுக்க நெறியையும் போதிப்பது பெற்றோரே!  என்ற அணியில், கணிதத்துறைப் பயிற்சி ஆசிரியை மிருதுளா, 11ம் வகுப்பு மாணவர் பிரகலாதன் குமாரசாமி, மாணவி கிருஷ்ணி, தமிழாசிரியர்  பொன். சங்கர் ஆகியோர் பேசினர்.

பண்பாட்டையும் ஒழுக்க நெறியையும் போதிப்பது ஆசிரியரே! என்ற அணியில் ஆங்கிலத்துறைப் பயிற்சி ஆசிரியை ஜெயகீர்த்தனா, 11ம் வகுப்பு மாணவர் அருண் கார்த்திகேயன், மாணவி குழலினியாள், இயற்பியல் துறைப் பயிற்சி ஆசிரியர் கிரண்ராஜ் ஆகியோர் பேசினர்.

இரு தரப்பினரின் வாதங்களுக்குப் பின்னர், நடுவர் கருணாநிதி, பண்பாட்டையும் ஒழுக்க நெறியையும் போதிப்பதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய இருவரின் பங்கும் சரிசமமாக உள்ளது என்று தீர்ப்பளித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.