தமிழ்நாடு கைவினைக் கழகத்தின் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கோடைகாலக் 4-வது கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ‘சாரங்–2026’ ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறுகிறது.

சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் அமைந்துள்ள 77 டிகிரி ஈஸ்ட் வளாகத்தில் கண்காட்சி இன்று தொடங்கியது.கோடைகாலத்திற்கு ஏற்ற எளிமையான ஆடைகள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலகுவான பண்டிகைக் கால ஆடைகள் இதில் இடம்பெற்றுள்ளது. கைத்தறி, நெசவுத் தொழில்களில் ஈடுபடும் வடிவமைப்பாளர்களுக்கு கண்காட்சியில் சிறப்பு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

கண்காட்சியில் ஜவுளி, புடவைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், மதிப்புமிக்க நகைகள், பட்டுத் துணிகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும்.
