மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம், பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, செயலர் கவிதாசன் மற்றும் பள்ளியின் முதல்வர் உமாமகேஸ்வரி ஆகியோர் கொடிநாள் நிதியாக ரூ.2,23,800 வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

நமது நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக நாட்டுப்பற்று மிக்க குடிமகனாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் அனைவரும் தங்கள் பங்களிப்பை அளிக்கும் வகையில் இந்த நிதி வழங்கப்பட்டது.