சி.பி.எஸ்.சி. ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்கள் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி 2ம் இடம் பெற்றுள்ளது.
அகில இந்திய அளவில் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் போபால் ஓரியண்டல் பப்ளிக் பள்ளியில் அக்டோபர் 10 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றன. இறுதிச்சுற்றுப் போட்டிகளில் எட்டு அணிகள் கலந்து கொண்டன. 17 வயதிற்குட்பட்டோருக்கான மாணவர் பிரிவில், சச்சிதானந்த பள்ளி இரண்டாம் இடம் பெற்றது. பள்ளியின் 14 மற்றும் 19 வயதிற்குட்ட அணியினர் மூன்றாம் இடம் பெற்றனர்.

மாணவர்களுக்கு போபால் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் அலோக் ஷர்மாஜீ, பள்ளயின் செயலர் கவிதாசன் ஆகியோர், கோப்பையையும், பதக்கங்களையும் வழங்கினர்.
பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி வாழ்த்து தெரிவித்தார். பள்ளிச் செயலர் கவிதாசன், ரூட்ஸ் குழும நிறுவனங்களின் தலைமை நிதித்துறை அதிகாரி ரவி ஆகியோர் கோவை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்று வாழ்த்தினர்.
பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், கல்விப்புல முதன்மையர் ஷீலா கிரேஸ், பள்ளியின் உடற்கல்வித்துறை துணை இயக்குநர் அனிதா, ஹாக்கி பயிற்சியாளர் யோகானந்த் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினர்.


