கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோவில் சீசனையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, மச்சிபட்டணம் – கொல்லம் (எண் 07101) வாராந்திர சிறப்பு ரயில் வரும் 14, 21, 28, டிசம்பர் 26, ஜனவரி 2 ஆகிய தேதிகளில், மச்சிபட்டணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் செல்லும். இந்த ரயில் போத்தனுாருக்கு மதியம் 12 மணிக்கு வந்து செல்லும்.

மறுமர்க்கத்தில் கொல்லம் – மச்சிபட்டணம் (எண் 07102) வாராந்திர சிறப்பு ரயில் வரும், 16, 23, 30, டிசம்பர் 28, ஜனவரி 4 ஆகிய தேதிகளில் ஞாயிறு அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு மச்சிபட்டணம் வந்தடையும். இந்த ரயில், போத்தனுருக்கு காலை 11.10 மணிக்கு வந்து செல்லும். சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

அதேபோல நரசாபுரம் – கொல்லம் (எண் 07105) சிறப்பு வாராந்திர ரயில், வரும் 16 முதல் ஜனவரி 18 ம் தேதி வரை, ஞாயிறு மாலை 3 மணிக்கு நரசாபூரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். போத்தனுாருக்கு மதியம் 12 மணிக்கு வந்து செல்லும்.

மறுமர்க்கத்தில் கொல்லம் – நரசா புரம் (எண் 07106) ரயில், வரும் 18 முதல், ஜனவரி 20 ம் தேதி வரை, செவ்வாய் கிழமை அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு நரசாபுரம் சென்றடையும். போத்தனுாருக்கு காலை 11.10 மணிக்கு வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.