கோவை ராயல் கேர் மருத்துவமனையின், புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பாக புற்றுநோயில் இருந்து மீண்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ் கலந்துகொண்டு பேசினார். சமூக ஊடக மருத்துவம் மற்றும் நேரடி மருத்துவர் ஆலோசனை – எதை நம்பலாம்? என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம் அய்யா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
புற்றுநோய் விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஓவிய போட்டி, கோலப்போட்டி, நாடகம், நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி குறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் மற்றும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவ நிபுணர் சுதாகர் பேசுகையில்: புற்றுநோய் சிகிச்சையில் தற்போது குணமடைவோர் சதவீதம் நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் அதிகரித்துள்ளது. நோயாளிகள் பக்க விளைவுகள் இல்லாமல் எளிதில் புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
புற்றுநோய் என்றாலே குணப்படுத்த முடியாத நோய் என்ற தவறான புரிதல் பொதுமக்களிடையே உள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதால் புற்றுநோய் குறித்த பயம் விலகி நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே நோக்கம் என தெரிவித்தனர்.
நிகழ்வில் புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து மீண்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
