கோவை ரோட்டரி கிளப் ஆப் சேட்டிலைட் அமைப்பு மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வழங்கப்பட்டது. இதை டீன் நிர்மலாவிடம் ரோட்டரி கிளப் தலைவர் வினோத் வழங்கினார். நிகழ்ச்சியில் செயலாளர் முருகப்பன், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஏற்கனவே ரோட்டரி கிளப் சார்பில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பேட்டரி கார் வழங்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
