ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஐகான்ஸ் சார்பில், அவினாசி சாலையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் கோவை நகர காவலர்களுக்கான நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனை நவம்பர் 2ம் தேதி நடைபெற்றது.

கோவை நகர காவல் ஆணையர் சரவண சுந்தர்  தலைமை விருந்தினராகவும், போக்குவரத்து துணைத் தலைவர் அசோக் குமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

ரோட்டரி கிளப் ஐகான் தலைவர் ஜெயா முரளி நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனையின் நோக்கம் குறித்துப் பேசினார். எதிர்காலத்தில் காவல்துறையினரின் நலனுக்காக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இரத்த பரிசோதனைகள் போன்ற கூடுதல் முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இந்த பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து திட்டத் தலைவர் டாக்டர் பத்மஜா விளக்கினார். முகாமின் ஒரு பகுதியாக சுமார் 250 காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.