கோயம்புத்தூர் அப்டவுன் ரோட்ராக்ட் கிளப் சார்பில், மாற்றுத்திறனாளி மற்றும் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 300 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஓட்டப்பந்தயம், தடகளப் போட்டிகள், பந்து விளையாட்டுகள் மற்றும் பல்வேறு உள்விளையாட்டுப் போட்டிகள் என பல பிரிவுகளில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நித்யா, சுமதி, சம்பத், ஹேமா, ஹர்ஷினி ஆகியோர் கலந்துகொண்டனர்.