கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கோவை போக்குவரத்து கிழக்கு பகுதியின் காவல் உதவி ஆணையர் சேகர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள், விதிமீறல்களால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமானந், காவல் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.