கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஏர் ரைஃபிள் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நான்கு நாட்கள் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் கீதா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக தேசியத் துப்பாக்கி சுடுதல் துறையின் பயிற்றுநர் ஸ்ரீநிதி அபிராமி வெங்கடேஷ், கோயம்புத்தூர் ரைஃபிள் அகாடமியின் செயலாளர் வெங்கடாஜலபதி லந்துகொண்டனர்.
ஏர்ரைபிள், ஏர்பிஸ்டல், ஓபன் சைட்ஷூட்டிங் உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு பதிவு செய்யப்பட்ட கிளப்புகள், துப்பாக்கி சுடும் அகாடமிகளைச் சேர்ந்த 240க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சுடும் வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சான்றிதழும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

