டெல்டா மாவட்டங்களை பழனி, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளுடன் இணைக்கும் தாம்பரம் -போத்தனூர் / கோயம்புத்தூர் – தாம்பரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலை (06184/06185) மீண்டும் இயக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் தெற்கு ரயில்வேயை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு எழுதிய கடிதத்தில், இந்த ரயில் பயணிகளிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிக அளவிலான பயணிகள் பயணிக்கின்றனர். அனைத்து இடைநிலை ரயில் நிலையங்களின் பயணிகளுக்கும் பயனளிக்கிறது. ஆனால் ஜூன் 8 ஆம் தேதிக்கு பின்னர் ரயில் சேவை நீட்டிக்கப்படாதது பயணிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் பணிகள் காரணமாக தாம்பரத்திலிருந்து ரயிலை இயக்குவதில் ரயில்வேக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால், கோவை அல்லது செங்கல்பட்டு மற்றும் போத்தனூர் சந்திப்பு / கோயம்புத்தூர் இடையே ரேக் பராமரிப்புடன் இயக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
