ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76ஆம் குடியரசு தினத்தை “கோல்டன் இந்தியா: பாரம்பரியம் மற்றும் முன்னேற்றம்”  என்ற பிரம்மாண்டமான நிகழ்வுடன் கொண்டாடியது.

இந்த நிகழ்வு நாட்டு நலப்பணித்திட்டம்(NSS) மற்றும் தேசிய மாணவர் படை (NCC)ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

rathi ed 1

நிகழ்விற்கு கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் மாணிக்கம், முதல்வர் பாலசுப்ரமணியன், துணை முதல்வர் சுரேஷ், பல்வேறு பள்ளித் தலைவர்கள், தேர்வு கட்டுப்பாட்டாளர், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் நடைபெற்றது.

rathi ed 2

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி கிளப் ஆஃப் கோஸ்மோபாலிடன் தலைவர் ரமேஷ் தியாகராஜன், ரத்தினம் முன்னாள் மாணவர் மற்றும் ஆர்பிஎம் இன்டர்நேஷனல் சிஆர்எம்  லீட் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி தேசியக் கொடி ஏற்றல் மற்றும் தேசிய கீதம் பாடலுடன் துவங்கி, இந்தியாவின் சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான மதிப்பை வலியுறுத்தியது.

நிகழ்வில் மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம்பெற்றன. மேலும், தேசபக்திப் பாடல்கள், பாரம்பரிய மற்றும் நவீன நடனங்கள், மற்றும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தையும் பல்வேறு துறைகளில் அதன் சாதனைகளைப் பிரதிபலிக்கும் சிந்தனை தூண்டும் நாடகம் ஆகியவை இடம் பெற்றன.