கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டின் முன்பு சாலையின் இருபுறமும் 30 அடி வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதில் கடைகள் பரப்பப்பட்டு மண் பாண்டங்கள், பூஜை சாமான்கள் விற்பனை நடைபெறும்.
மார்க்கெட்டை ஒட்டியுள்ள பகுதியில் பூக்கடை ஆக்கிரமிப்பு, பூஜை சாமான் விற்கும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு, வாகனங்கள் நிறுத்தம் என வழி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததால், வாகன ஓட்டிகளுக்கு அந்த வழியே செல்ல சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தலின்படி, பூ மார்க்கெட் பகுதியில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை காவல்துறையினரின் உதவியுடன் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
அதன்படி, லங்கா கார்னர் சாலையில் 50 கடைகள் அகற்றப்பட்டு 40 அடி சாலையும், மேட்டுப்பாளையம் சாலையில் 27 அடி சாலையும் மீட்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறமும் முதல்கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என மாநகராட்சியினர் தெரிவித்துள்ளனர்.
