ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் விருது வழங்கும் விழா இரத்தினம் கிரேண்ட் ஹாலில் நடைபெற்றது.

தி வீகெண்ட் லீடர் செய்தி நிறுவனம் மற்றும் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து சிறந்த தொழில் முனைவோர் மற்றும் சூப்பர் ஸ்டார்ட் அப் விருது போன்ற விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.

இவ்விழாவிற்கு, ரத்தினம் கல்விக் குழுமத்தின் செயலாளர் மற்றும் கல்லூரி முதன்மை நிர்வாகி மாணிக்கம் வரவேற்றார். ரத்தினம் கல்விக் குழுமத்தின் இயக்குநர் சீமா செந்தில், தலைமையேற்று சிறப்பித்தார்.

விருது வழங்கும் விழாவில் தி வீக்கெண்ட் லீடர் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் வினோஜ் குமார், அறிமுகவுரை நிகழ்த்தினார். கோவை பழமுதிர் நிலையத்தின் நிறுவுனர் நடராஜன் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி செந்தில் நடராஜன் மற்றும் டேஏபிபி பீவிரேஞ்சர்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் நிறுவுனர் பிரபு காந்திகுமார் ஆகியோர் சிறந்த தொழில் முனைவோர்க்கான விருதை பெற்றார்கள்.

மேலும், பீ லிட்டில் துணை நிறுவுனர் , செல்வி. காயத்ரி,சூரிய பிரபா, சக்தி பிரியதர்ஷினி ஆகியோர் சிறந்த சூப்பர் ஸ்டார்ட் அப் விருது பெற்றனர்.r3 r4

சிறப்பு விருந்தினராக முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் பங்கேற்று விருதுகள் வழங்கி கௌரவித்தார். அவர் தனது உரையில், வெற்றியின் சிறப்புகளையும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய கடின உழைப்பு, பிறரை மதித்தல் போன்ற நற்குணங்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சிறுகதை கூறி விளக்கினார்கள். நிகழ்வில் விருது பெற்றவர்கள் தாங்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தைக் குறித்தும் ,வெற்றியின் இலக்குகளை குறித்தும் மாணவர்களிடம் கேள்வி பதில் நிகழ்வாக நடத்தினர்.

தி வீக்கெண்ட் லீடர் செய்தி நிறுவனத்தின் வி. ஜே. ஆர்த்தி, துணை ஆசிரியர் உஷா பிரசாத் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர்,புல முதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள்
என பலர் பங்கேற்றனர்.