சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மாருதி ஷோரூம் அருகில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது புதிய ஷோரூமை துவங்கி உள்ளது.
நிகழ்வில் சேலம் அர்த்தநாரி லூம் சென்டர் (டெக்ஸ்டைல்) மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு நிறுவன உறுப்பினர் நிர்வாக இயக்குநர் அழகரசன் ஷோரூமை திறந்து வைத்தார்.
சேலம் மாருதி கன்ஸ்ட்ரஷன்ஸ் & மனோஜ் பஸ் சர்வீஸ் நிர்வாக இயக்குநர் ராம்ராஜ் மற்றும் வளர்மதி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
கேஎம்பி குழும நிறுவனங்கள் நிர்வாக இயக்குநர் யூகப் பாஷா முதல் விற்பனையை துவக்கி வைக்க, பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரி பொருளாளர் கோவிந்தன் பெற்றுக்கொண்டார்.
திறப்பு விழாவிற்கு சேலம் துணை மேயர் சாரதாதேவி, விஎஸ்ஏ கல்வி நிறுவன தலைவர் மலர்விழி ராஜா மற்றும் காத்தமுத்து எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் அஸ்வின் அனைவரையும் வரவேற்றார்.