ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய கிளையை குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் துவங்கப்பட்டுள்ளது.
கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் ஷோரூமை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில், குடியாத்தம் அமலு விஜயன் எம்.எல்.ஏ மற்றும் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) ரவிக்குமார் மங்கள ஒளி ஏற்றி வைத்தனர். விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் வரவேற்றார்.