ராம்ராஜ் காட்டன் நிறுவனம், அறிஞரும் கலாச்சார வல்லுநருமான துஷ்யந்த் ஸ்ரீதருடன் இணைந்து தனது ஆச்சார்யா பஞ்சகச்சம் வேஷ்டியை பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஆச்சார்யா பஞ்சகச்சம் வேஷ்டி, புனித நிகழ்வுகள், மதம் சார்ந்த நிகழ்வுகள், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவற்றின்போது அணியத்தக்க வகையில் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஓர் அடையாளச் சின்னமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பான நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜன் பேசுகையில், 4000 வகையான வேஷ்டிகளைத் தயாரித்து நாடெங்கும் விற்பனை செய்து வருகிறோம். இவற்றுள், பஞ்சகச்சம் வேஷ்டி என்பது ஆச்சாரியர்களுக்கும் குருமார்களுக்கும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது.

ஆந்திரா, தென்னிந்தியா தாண்டி உலகமெங்கும் இதனை எடுத்துச்செல்ல வேண்டும் என எண்ணியபோது இயல்பாகவே எங்களின் தேர்வாக துஷ்யந்த் ஸ்ரீதர் அமைந்துவிட்டார். ஆச்சார்யா பஞ்சகச்சம் வேஷ்டி என்பது பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, நமது பாரம்பரியத்தை புனிதமான பண்டிகை நாட்களின் மகிமையுடன் சேர்த்து நெய்ததாகும் என்றார்.

துஷ்யந்த் ஸ்ரீதர் பேசும்போது, ஆச்சார்யா வேஷ்டிகள் வாயிலாக ராம்ராஜ் காட்டன் நிறுவனம் புனிதமான ஆன்மீக மரபுக்கு மரியாதை செலுத்துவது பெருமைக்குரிய விஷயம். நமது கலாச்சாரத்தைப் போற்றி வளர்க்க வேண்டும் என்பதுடன் இளைய தலைமுறை பாரம்பரிய உடைகளை அணிந்து முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.