மதுரை விளக்குத்தூண் பகுதியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய ஷோரூம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தலைவர் மற்றும் தாளாளர் ஹரி தியாகராஜன் ஷோரூமை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். விளக்குத்தூண் நிலக்கிழார் துரைக்கண்ணன் முதல் விற்பனையைப் பெற்றுக் கொண்டார். விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் வரவேற்றார்.
