ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், இந்தியன் சொசைட்டி பார் டெக்னிக்கல் எஜுகேஷன் அமைப்பு வழங்கிய மாநில அளவிலான சிறந்த திட்ட விருது மற்றும் சிறந்த மாணவர் விருதுகளை பெற்றுள்ளனர்.

2024 ஆம் ஆண்டிற்கான மாநில மாணவர் மாநாடு, சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் ஈஸ்வர், சிறந்த பிராஜெக்ட் விருது பெற்றார்.

மேலும், சிறந்த மாணவர் விருதை, சிவில் இன்ஜினியரிங் துறையில் மூன்றாம் ஆண்டு மாணவர் முகுந்த் பிரனவ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறையில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஜோனாதன் வில்பிரட் ஆகியோர் பெற்றனர்.

விருது பெற்ற மாணவர்களை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.