கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் சென்னைவாழ் முன்னாள் மாணவியருக்கான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இதில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமையுரை ஆற்றினார். கல்லூரிக்கும் மாணவிகளுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பைப் பற்றியும், கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்குப் பலவிதங்களிலும் முன்னாள் மாணவிகள் உதவி வருவதைப் பற்றியும் கல்லூரி முதல்வர் சித்ரா பகிர்ந்து கொண்டார். தற்போது வெவ்வேறு பதவிகளில், பொறுப்புகளில் உள்ள மாணவிகள், தங்களுடைய மகிழ்ச்சிகரமான கல்லூரி வாழ்க்கையை நினைவு கூர்ந்தனர்.