சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அக்சயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான வாசகங்களை முழக்கமிட்டபடி மாணவர்கள் பேரணி சென்றனர். கிணத்துக்கடவு காவல் துறையினர் இதில் கலந்துகொண்டனர். அக்சயா கல்லூரியின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபிலன், முதல்வர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.