கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி நடைபெற்றது. நடுவராக வினாடி வினா நிபுணர் ரங்கராஜன் பங்கேற்றார்.

கோவை, பி.எஸ்.பி.பி மில்லியனம் பள்ளி முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000 வென்றது. சின்மயா சர்வதேச உறைவிடப் பள்ளி மூன்றாம் பரிசாக ரூ.6,000 வென்றது.

WhatsApp Image 2025 11 11 at 5.09.52 PM

கல்லூரி நிர்வாகத்தின் சார்பில், போட்டியில் வெற்றி பெற்ற 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அடுத்த கல்வியாண்டில் கே.பி.ஆர் கலைக் கல்லூரியில் பயில்வதற்குண்டான சலுகைகள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. நிகழ்வில் கல்லூரியின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், முதல்வர் கீதா, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.