பி.எஸ்.ஜி. சர்வஜன முன்னாள் மாணவர் பேரவை சார்பில், முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (29.12.2024) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் செங்குட்டுவன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மாணவர் பேரவையின் சின்னம் மற்றும் வாழ்நாள் உறுப்பினர் அட்டை வெளியிடப்பட்டது. இதில் பி.எஸ்.ஜி. சர்வஜன முன்னாள் மாணவர் பேரவையின் தலைவர் நாராயணசாமி, துணைத்தலைவர் நந்தகுமார், செயலர் தாரணி, பொருளாளர் சமாதான பிரபு, துணை செயலர் சிவகுமார் மற்றும் பள்ளி முதல்வர், பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.