பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்றம் சார்பில் யூபோரியா 25 எனும் தலைப்பில் கல்லூரி கலை விழா ஜி. ஆர்.டி கலையரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். செயலாளர் கண்ணையன் வாழ்த்துரை வழங்கினார். பி.எஸ்.ஜி. மருத்துவமனை இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் இளைஞர் பாராளுமன்றம், தி பிரைன் பாக்ஸ், இ-ஸ்போர்ட்ஸ், விஸ்டம்வார், தனிநபர் நடனம், குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. 80க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.