தமிழ்நாட்டில் இதய மாற்று அறுவை சிகிச்சையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்பாட்டிற்கான பாராட்டு விருதை தமிழக அரசிடம் இருந்து பி.எஸ்.ஜி  மருத்துவமனை பெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் இருதய சிகிச்சை துறையின் முதன்மை மருத்துவருமான புவனேஸ்வரன் மற்றும் இதய மாற்று அறுவைசிகிச்சைத்துறை சிறப்பு மருத்துவர் ப்ரதீப் ஆகியோரிடம், தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இவ்விருதை வழங்கினார்

இதய மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு சிக்கலான, உயிர் காக்கும் செயல்முறையாகும், இதற்கு உயர் மட்ட நிபுணத்துவம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அனுபவமிக்க, அர்ப்பணிப்புள்ள மருத்துவ நிபுணர்கள் குழு தேவைப்படுகிறது. பி.எஸ்.ஜி மருத்துவமனையில் , மேம்பட்ட இதய மாற்று அறுவைசிகிச்சை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பல நோயாளிகளுக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பை அளித்து மட்டுமல்லாமல், இதய மாற்று அறுவை சிகிச்சை திட்டம் 4 வயது சிறுவன் முதல் 60 வயது முதியவர் வரை உள்ள  பல நோயாளிகளின்  வாழ்வை  மாற்றியமைத்துள்ளது. பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இதய மாற்று அறுவைசிகிச்சை மருத்துவக் குழுவானது  இதய ஆரோக்கியத்தில் தொடர்ந்து சாதனைகள் புரிந்து மென்மேலும் முன்னேறி வருகிறது.