கோவை ஒண்டிப்புதூர் அருகே புதிதாக திறக்க உள்ள மதுகடைக்கு எதிராக சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் தலைமையில் அதிமுக, பாஜக, தவெக மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் கூறுகையில்: நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர் நகர், பட்டணம் பிரதான சாலை, காமராஜர் நகர், கம்பன் நகர், சாரதி நகர் என இப்பகுதி குடியிருப்பு நிறைந்த பகுதியாகும். ஏற்கனவே 3 அரசு டாஸ்மாக் இங்கு உண்டு.

மகளிர் விடுதி, பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்திற்கு இடையூறாக மதுக்கடை திறக்கப்பட உள்ளது. இங்கு மதுக்கடை வந்தால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மதுக்கடைக்கு எதிராக மக்கள் போராடுகின்றனர் எனக் கூறினார்.