சாகித்திய அகாதமி மற்றும் டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம் நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி ‘இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம்’ குறித்த புத்தகத்தினை வெளியிட்டுத் தலைமை உரையாற்றி பேசுகையில்: தமிழிக்குப் பங்காற்றிய மிகச் சிறந்த ஆளுமை பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம். அதற்கு உறுதுணையாக இருந்தது அவரின் மொழியறிவும், ஒழுக்கச் சிந்தனையும் தான். எனவே வளரும் தலைமுறையினர் இந்த இரண்டினையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்’ என அறிவுறுத்தினார்.
பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம், சாகித்திய அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் தாமோதரன், மேட்டுபாளையம் அரசு கலை கல்லூரியின் துறைத்தலைவர் செந்தில்குமார், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் கந்தசுப்ரமணியம், தமிழ்த்துறைத் தலைவர் குப்புச்சாமி, தமிழ் ஆர்வலர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
