ஈரோட்டில், வி.ஹெச்.பி பூஜாரிகள் பேரமைப்பு சார்பில், பூஜாரிகள் உரிமை காக்கும் மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் சித்தோடு மாகாளியம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் தங்கமணி வரவேற்புரை ஆற்றினார். சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர்கள் முத்துச்சாமி, சிவநாதன் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் இளங்கோவன், மாநில துணை செயலாளர் வெள்ளியங்கிரி சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பூஜாரிகள் கலந்து கொண்டனர்.
மார்ச் 11ஆம் தேதி நடைபெறும் விஷ்வ இந்து பரிஷத் பூஜாரிகள் பேரமைப்பு மாநில மாநாட்டிற்கு, ஈரோடு மாவட்டத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட பூஜாரிகள் கலந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், 60 வயது நிறைந்த பூஜாரிகளுக்கு ஐந்தாயிரம் வழங்கிட வேண்டும். இந்து அறநிலை கட்டுப்பாட்டில் இல்லாத பூஜாரிகளுக்கு மாதம் ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும். பூஜாரிகளுக்கு அனைத்து கோவில்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
