கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் சின்னத்தடாகம், பெரியதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோருடன் இணைந்து ஊர்வலமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொதுமக்களிடம் அவர் பேசும்போது, திமுக ஆட்சி சொன்னதை செய்யவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பை அனைவருக்கு கொடுப்பதாக சொன்னார்கள் கொடுத்தார்களா? 150 நாளாக உயர்த்துவதாக சொன்னார்கள் உயர்தினார்களா? என்று கேள்வி எழுப்பினார். 100 நாளையே ஒழுங்காக கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என கேட்டு, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.