கோவை அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும்  சர்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிவேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என கேட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பரப்புரையின் போது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.